சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பினது செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களது நிதி உதவியின் மூலம் ஆரையம்பதியினைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பினது கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் முன்னாள் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் உப செயலாளர் திருமதி செல்வி மனோகர்,சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours