தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.எனினும், தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 20ஆவது அமர்வு இன்று முற்பகல் சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவின் தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் குறித்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours