தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்
சம்பவம் தொடர்பில் சந்திரசேகரன் ராஜன் கருத்து தெரிவிக்கையில்
நேற்று மாலை 6 மணியளவில் எனது வீட்டிற்கு 20 பேர் கொண்ட கும்பலொன்று டிப்பர் மற்றும் மோட்டார் வண்டிகளில் வருகை தந்து கத்தி கூச்சலிட்டு வீட்டு கதவினை கோடரியால் கொத்திவிட்டு சென்றுள்ளார்கள்.
நான் எனது சகோதரியின் வீடு அருகில் உள்ளது. நான் பின்பக்கத்தால் எனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள்.
இதன்போது அக்குழுவினர் வீட்டு வாசலில் நின்று சஜித்திடம் காசு வாங்கி விட்டா அவருக்கு வேலை செய்தாய். இனி நாங்கள் வந்துவிட்டம். உன்னை கவனிப்போம் என்று கூச்சலிட்டனர் ராஜன் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours