காரைதீவு நிருபர் சகா

கல்முனையில் நேற்று(18)திங்கட்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்தராஜபக்சவின் பிறந்த நாளையொட்டி கல்முனைத்தமிழ் இளைஞர்கள் இரு அணியாக இனிப்புவழங்கிக் கொண்டாடியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இவர்கள் புதிய ஜனாதிபதி கோட்டபயவின் தெரிவையிட்டு இதேவிதமாக இனிப்பு வழங்கி பட்டாசுகள் வெடிக்கவைத்து மகிழ்ச்சிக்கொண்டாட்டங்களை கொண்டாடினர்.
நேற்று(18) அவரின் பதவியேற்பை முன்னிட்டு பால்சோறு பொங்கி மக்களுக்கு வழங்கினர். போக்குவரத்திலீடுபட்ட மக்களுக்கும் பஸ்களில் பயணித்த மக்களுக்கும் பால்சோறு நீராகாரம் பால் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



Post A Comment:
0 comments so far,add yours