மேவின்
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மகிழூர் முனை சக்தி வித்தியாலய வீதியானது பிரயாணம் செய்யமுடியாத அளவிற்கு குன்றும் குழியுமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் வீதியில் அண்மையில் பெய்த மழை நீரினால் நிரம்பி போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது
இந்த வீதியினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பிரயாணம் செய்துவருகின்றனர் இந்நிலையில் வீதியில் நீர் நிறைந்து இருப்பதனால் ஆசிரியர்கள்இ மாணவர்கள் உரிய நேரத்தில் தமது கடமையை நிறைவேற்ற முடியாமல் தினமும் கஷ்ரப்படுகின்றனர்
இதனைக் கருத்தில் கொண்டு இவ்வீதியைச் செப்பநிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Post A Comment:
0 comments so far,add yours