(சா.நடனசபேசன்)

மட்டக்களப்பின் ஊடகத்துறை வரலாற்றில் மற்றுமொரு பதிவாக மட்டு ஊடக அமையம் திறக்கப்பட உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் அமையப்பெற்றுள்ள கட்டிடத்தில் மேற்படி மட்டு ஊடக அமையம் திறக்கப்படவுள்ளது.


இவ் ஊடக அமையத்தின் திறப்பு விழா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் எதிர்வரும் 03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் ஆகியோரினால் மட்டு ஊடக அமையம் திறந்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்படி ஊடக அமையத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஊடக சந்திப்புக்கள் அனைத்தும் இடம்பெறும் என்பதை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours