(31) வௌியிடப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கலந்துரையாடி, மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தமது கட்சியின் நிலைப்பாட்டை வௌியிடுவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையிலான சிபாரிசுகளை முன்வைத்துள்ள வேட்பாளர் தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours