மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் இன்று அதிகாலை வீசிய சுழல் காற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்

இதன்போது, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பரே உயிரிழந்துள்ளார்.

கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீசிய சுழல் காற்றினால் வீட்டின் சுவர் பகுதி குறித்த நபரின் தலையில் இடிந்து விழுந்தமையால் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours