(க.விஜயரெத்தினம்)
துறைநீலாவணையில் கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வெற்றிக் களிப்பில் ஈடுபட்டார்கள்.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளமையை அடுத்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமைப்பாளர் பா.சத்தியன்(சத்தியன் ரெயிலர்),முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் நல்லதம்பி பிரகாஸ் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
இக் கொண்டாட்டத்தின்போது துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக பட்டாசு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேவேளை,துறைநீலாவணையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்ஷ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றோரின் உருவப்படங்களடங்கிய பதாதை காட்சிப்படுத்தப்பட்டு வெற்றிக்களிப்பில் ஈடுபட்டார்கள்.



Post A Comment:
0 comments so far,add yours