மட்டக்களப்புமாவட்டத்தின் வடகீழ் பருவப்யெர்ச்சிக்காலநிலை ஆரம்பமாகவுள்ளமையால் அனர்த்தமுகாமைத்துவநிலையம் முன்னாயித்த நடவடிக்கைளைஆராயும் கூட்டம் (2) காலை  9.30 மணிக்குமாவட்டசெயலககேட்போர் கூடத்தில் மாவட்டஅரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டஅனர்த்தமுகாமைத்துவஉதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத் உரையாற்றுகையில் எதிர்வருகின்ற தேர்தல் காலமும் வடகீழ் பருவப்யெர்ச்சியும் ஒரேகாலத்தில் ஆரம்பமாகவுள்ளமையால் பல இடர்பாடுகளை மக்கள் எதிர்கொள்ளநேரிடலாம் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் காலத்திற்காக 448 வாக்கேடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் மழைவெள்ளம் காணப்படுமாயின் மக்கள் இடம்பெயர நேரிட்டல் பாடசாலைகளில் தான் வழமையாக தங்கவைக்கப்படுவார்கள் தேர்தல் காரணத்தினால்அவர்களுக்கு பொருத்தமான இடங்களைஅடையாளப்படுத்தப்பட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றது
.
தேர்தல் உதவிதெரிவத்தாட்சிஅலுவலர் ஆர்.சசிலன் உரையாற்றுகையில் மழைக்காலத்தில் மக்கள்  தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்குவாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்வதுகொண்டுவருவதற்கானவிசேடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்னது.தற்யோதுவாக்களிப்புநேரம் ஒருமணித்தியாலம் கூட்டப்பட்டு இருப்பதால் ஒருசிலப்பகுதிகளில் யானைகளின் தொல்லைகள் ஏற்படும் பகுதியில் வனஜிவராசிதிணைக்களம் அதற்கானநடவடிக்கைஎடுக்கும் எனக்குறிப்பிடார்.

அனர்த்திற்கானபருவகாலம் ஆரம்பமாக இருக்கும் காலத்தில்த்தான் தேர்தலும் இடம்பெயரவுள்ளமையால் மக்களின் பாதுகாப்பு,சுகாதாரம் மற்றும் தேவையான உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் வழங்கல் ,போக்குவரத்துபோன்றசகலஏற்பாடுகளும் முன்னாயித்ததுடன் இருக்கவேண்டும் எனசம்மந்தப்பட்ட திணைக்களங்களை அரசாங்கஅதிபர் கேட்டுக்கொண்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours