கே.கிலசன்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை 40 வட்டையில் சோளச்செய்கையில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு தொழிநுட்ப உதவியாளர் எம்.ஜனகோபன் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய போதனாசிரியர்கள் பெருமளவான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது எவ்வாறு படைப்புழு தாக்கத்திலிருந்து சோளச்செய்கையை ஒருங்கிணைந்த முறையில் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் அதற்கான புதிய பயிர்ச்செய்கை முறைகள் பற்றியும் களத்தில் தெளிவூட்டப்பட்டது.







Post A Comment:
0 comments so far,add yours