கே.கிலசன்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடரும் இடைவிடாத மழையினால் பல பிரதேசங்களில் வயல் நிலங்கள் முற்றாக மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக மண்டூர் வெல்லாவெளி பழுகாமம் கொக்கட்டிச்சோலை நாவிதன்வெளி சென்றல்கேம்ப் போன்ற இன்னும் பல கிராமங்கள் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடுப்பகுதியில் வயல் நிலங்கள் விதைக்கப்பட்ட நாட்களிலும் தொடர் மழையால் அதிகளவான பயிர்கள் அழிவடைந்து சில வயல் நிலங்களில் மறுவிதைப்பும் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஒரு மாத வயதை கடந்த பயிர்கள் மீண்டும் மழைநீரில் மூழ்கியுள்ளது இந்நிலை சில நாட்களுக்கு தொடருமாயின் தமது நெல் வயல்கள் முற்றாக பாதிக்கப்படுமென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours