(எம்.ஏ.றமீஸ்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கமைவாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றுப்புறச் சூழல் நகரை சுத்தப்படுத்தும்  நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்த நகரை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டம் இன்று(04) இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதான வீதியில் மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சமூக மட்ட அமைப்புகள் போன்றவற்றின் பங்களிப்புடன்; இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று நகரில் பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள், சட்டவிரோத நடைபாதை வியாபார செயற்பாடுகள் போன்றன அப்புறப்படுத்தப்பட்டன. 

பிரதான வீதியோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரங்கள், பதாதைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், பிரதான வீதியோரத்தில் உள்ள வடிகான்கான் துப்பரவு செய்யப்பட்டதுடன், குப்பை கூழன்கள் துப்பரவு செய்யப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இதேவேளை புகை விசுறல் மூலம் டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாடு இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கருத்துத் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று மாநகர சபை அதிகாரி எல்லைப் பிரதேசத்தில் டெங்கு நுளம்பற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தும் வகையில் நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை துறைசார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொண்டு வருகின்றோம். அதற்கமைவாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இப்பிரதேசத்தில் சுமார் இருநூறு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

இந்நோய்த் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் அக்கரைப்பறு நகரினை நான்கு வலயங்களாக வகுத்து விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் எமது பகுதியில் உள்ள சுமார் இருநூறு டொன் குப்பை கூழன்கள் டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் மூலமாக அண்மையில் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மக்களின் பல்வேறு அசௌகரியங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்நோய்க்கான தீவிரத்தன்மையும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours