திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற பலத்த அடை மழை காரணமாக சிறு வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, அக்போபுர மற்றும் சேருவில போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்களின் அன்றாட செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அக்போபுர மற்றும் கந்தளாய் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours