(அறிவு)

தினக்குரல் அடங்கலாக தமிழ் தேசிய பத்திரிகைகளின் கவிதை பக்கங்களை அலங்கரிக்கின்ற கவிஞர் காரையன் கதன் கலைஞர் சுவதம் - 2019 திட்டத்தின் கீழ் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிவானந்தராஜா கதன் என்கிற இயற்பெயரை கொண்ட இவர் காரைதீவை சேர்ந்தவர் என்பதால் இலக்கிய உலகத்தில் காரையன் கதன் என்கிற பெயரில் உலா வருகின்றார்.

காரைதீவு பிரதேசத்தில் கலை, இலக்கிய துறைக்கு இவர் ஆற்றி வருகின்ற மகத்தான சேவைகளுக்காக இவருக்கு கலாசார அலுவல்கள் திணைக்களம்,  காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து இவருக்கான கௌரவத்தை வழங்கின.

இவர் பல கவிதை போட்டிகளிலும் பங்கேற்று ஏராளமான பரிசில்கள் வென்று உள்ளார். கிழக்கிலங்கையில் அரங்க கவிஞராகவும் மிளிர்கின்றார். உழைக்கும் பாட்டாளியான இவர் முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours