கல்முனை கல்வி வலயத்தில் தமிழ்ப் பாட உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற கண வரதராஜன் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்குத் தமிழர் ஒன்றியமும் கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பும் இணைந்து 1 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  ஒலுவில் சுற்றுலா விடுதியில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாரை மாவட்ட செயலாளர் குணாளன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.சிவநாதன் ,வைத்திய கலாநிதி கே.அருளானந்தம்,வைத்திய கலாநிதி சா.இராஜேந்திரன் ஆகியோர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் அவர்களது சேவைதொடர்பாக உரையாற்றியதுடன் நன்றியுரையினை கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் அம்பாரை மாவட்ட  பொருளாளர் க.நாகேந்திரன் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours