(சா.நடனசபேசன்)
போரதீவுப்பற்று பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னவத்ததைப் பகுதியில் அண்மையில் பெய்த அடை மழையினால் அப்பகுதியில் செய்கைபண்ணப்பட்டுவந்த அனைத்து வீட்டுத்தோட்டப் பயிர்களும் முற்றாக அழிந்து சேதமாகியுள்ளது..
சின்னவத்தை மாலையர்கட்டு போன்றபகுதிகளில் மக்கள் தங்களது ஜீவனோபாயமாக வீட்டுத்தோட்டங்களில் மரக்கறித்தோட்டங்களை உற்பத்திசெய்துவருவது வழமை இந்நிலையில் மழையின் காரணமாக அப்பிரதேசங்களில் 250 குடும்பங்களின் வீட்டுத் தோட்டம் முற்றாக அழிவடைந்துள்ளதால் பல இலட்சம் நட்டம் ஏற்பட்டு இருப்பதாக மாலையர்கட்டு கிராமசேவகர் சத்தியநாராயணன் உறுதிப்படுத்தினார்.
அதேவேளை இப்பிரதேங்களின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது அதாவது றாணமடு பூச்சுக்கூடு வீதி அதேபோன்று வக்கியல்ல சின்னவத்தை வீதிகள் வெள்ளத்தில் உடைப்பெடுத்து குன்றும் குழியுமாக காட்சியளிப்பதுடன் 16 ஆம் கிராமம் மாலையர் கட்டுக்கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் மூங்கிலாற்றுக்கு மேலால் அண்மையில் அமைக்கப்பட்ட பாலம் தாழ் இறங்கியிருப்பதனாலும் இக்கிராமங்களுக்குப் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இதனைக்கருத்தில் கொண்டு உடனடியாக தங்களுக்கான இழப்பீட்டினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.




Post A Comment:
0 comments so far,add yours