(காரைதீவு  நிருபர் சகா)

பொத்துவில் பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஜந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தும் ஒரு வாக்கினால் வெற்றிபெற்றுள்ளது.


பொத்துவில் பிரதேசசபையில் ஜ.தே.கட்சி(மு.கா) 06 உறுப்பினர்கள் 5 ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர்கள் 4 அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 1 ஜே.வி.பி. உறுப்பினர் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் 3  சுயேச்சை உறுப்பினர் 1 அ.இ.த.காங்கிரஸ் உறுப்பினர்; 1அடங்கலாக 21உறுப்பினர்கள் உள்ளனர்.

மு.கா.சார்ந்த ஜ.தே.கட்சியும் த.தே.கூட்டமைப்பும் அ.இ.த.காங்கிரசும் சுயேச்சையும் இணைந்து பொத்துவில் பிரதேசசபையில் ஆட்சிசெய்துவருகின்றனர்.

இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்திற்கான அமர்வு பொத்துவில் பிரதேசசபைத்தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தiலைமையில் சபாமண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
சபையில் ஸ்ரீ.ல.சுகட்சி உறுப்பினர் அன்வர் சதாத்தைத்தவிர ஏனைய 20பேரும் சமுகமளித்திருந்தனர்.

வரவுசெலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஆதரவாக 10வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் அளிக்கப்பட்டன. சமநிலையில் வாக்கு இருந்த காரணத்தினால் தவிசாளரின் மேலதிக வீற்றோ வாக்கினால் வரவுசெலவுத்திட்டம் வெற்றிபெற்றது.
ஆதரவாக 3ஆளும்ஜ.தே.க உறுப்பினர்களும் 3ஆளும் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும் 3 ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர்களும் 1 அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினரும் வாக்களித்தனர்.
எதிராக 3ஆளும் கட்சி உறுப்பினர்களும் 1ஆளும் அ.இ.த.காங்கிரஸ் உறுப்பினரும் 1 ஆளும் சுயேச்சை உறுப்பினரும் 3அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர்களும் 1ஜே.வி.பி.உறுப்பினரும் 1ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினரும் வாக்களித்தனர்.

அதாவது ஆளும் கட்சியைச்சேர்ந்த ஜந்து உறுப்பினர்கள் தவிசாளரின் வரவுசெலவுத்;திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
வாக்குகள் சமநிலையில் இருந்தகாரணத்தினால் தவிசாளர் வாஸித் தனது மேலதிக வாக்கையளித்து வரவுசெலவுத்திட்டத்தை வெற்றிபெறச்செய்தார். அதன்படி ஒரு வாக்கினால் 2020க்கான பட்ஜெட் வெற்றிபெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours