(துதி)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் எற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன்னாமுனை மற்றம் சிவபுரம் இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைத்தார். அத்துடன் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பிலான ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.




Post A Comment:
0 comments so far,add yours