துதி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய வரலாறுகளுடன் தொடர்புடைய ஆலயமான வெள்ளை வில்வபத்திரிக் கோணேசர் ஆலயத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் ஸ்ரீதர்சன் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் வி.குகதாஸன் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி திருமலை மாவட்ட வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மாவட்டம் பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 70 கிராமங்களில் இம் மரநடுகை வேலைத்திட்டம் இம் மாதம் பூராகவும் இளைஞர் அணியினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஆலய வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச வீதியோரங்களிலும் இம்மரநடுகை செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, வாலிபர் முன்னணிக்குப் புதிதாக உறுப்பினர்கள் இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours