துதி

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டகிரான்குளம் மத்தி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இலங்கைஇந்து மாமன்றத்தின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால்நிவாரண உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனின் வேண்டுகோளின்பிரகாரம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி உதவி மூலம் கிரான்குளம் மத்தி கிராமத்தில்பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு பாய், வெற்சீட் போன்ற உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

குறித்த உதவி வழங்கலில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன்மற்றும் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம், கிராம சேவை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆரையம்பதி செல்வாநகர் கோவில்குளம், புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தர்மபுரம்குறித்த பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரை அகற்றும் நோக்கில் அனர்த்த சேவையில் வடிகாலமைப்பை ஏற்படுத்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட அனர்த்த பணிப்பாளருக்கு அறிவித்திருந்தார். 






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours