(துதி)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை மு.ப 09.30 மணிக்கு, யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள், வாலிபர் முன்னணியினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது கட்சியின் 70 ஆண்டுகால வரலாறு, அதன் ஆளுமை, பரிணாமம், கட்சியின் நீதிமன்ற வழக்குகள், கட்சிக்கு எதிராக அரசுகளினால் முன்வைக்கப்பட்ட வழக்குகள், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள், விடுதலைப் போராட்டம் மற்றும் தற்கால சூழலிலான செயற்பாடுகள் போன்றன தொடர்பில் பிரதிநிதிகளால் கருத்துரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours