க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 97 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ....
எமது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 68 பேர்  கலைத்துறையிலும், 13 பேர் வர்த்தகத்துறையிலும், 07 பேர்  பௌதீக விஞ்ஞானத்துறையிலும், 03 பேர் உயிரியல் விஞ்ஞானத்துறையிலும், 05 பேர் பொறியியல் தொழில்நுட்ப துறையிலும், ஒருவர் (01) உயிரியல் தொழில் நுட்பத்துறையிலும் மொத்தமாக 97 மாணவர்கள் முதல் தடவையாக தெரிவு செய்ய பட்டுள்ளனர்.

இவர்களில்    11 பேர்  '3A' சித்திகளும், 16 பேர்  2A, B சித்திகளும், 9 பேர் 2A, C சித்திகளும் பெற்றுள்ளனர். மேலும் நகர் புற மாணவர்களில்  குறைந்தது 6 பேர்  விஷேட சித்தியில் மருத்துவத்துறைக்கு சென்றால் எமது கிராமப்புற மாணவிய ஒருவரும்  மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இம்மாணவி கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி (36 ஆவது மாவட்டநிலை) வைத்திய துறைக்கு போக கூடிய அதிகமான வாய்ப்புக்கள் உண்டு.இதனால் கிராமமும் ஒரு வைத்தியரைக் காணும்.மேலும் 4 மாணவிகளில்  அரசடித்தீவு மாணவிகள் இருவரும்,அம்பிளாந்துறை மாணவிகள் இருவருமாக சட்டதுறைக்கும், முதலைக்குடா  மாணவன்  தகவல் தொழிநுட்ப துறைக்கு அகில இலங்கை ரீதியாக 154 இடத்திற்கு விஷேட ரீதியாக செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக முன்னின்று எம்முடன் இணைந்து இரவு பகலாக  கஷ்ரப்பட்ட அதிபர்கள், அழைத்த பொழுதெல்லாம் மனமுவந்து கற்பித்த மதிப்புக்கும் கெளரவத்துக்கும் உரிய  ஆசிரியர்கள், மாணவர்கள்,பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வலயக்கல்வி உத்தியோகஸ்தர்கள்,மற்றும்  அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் சமூக சங்கங்கள், மன்றங்கள், ஆலயங்கள் ம
ற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் என்றவகையில் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆங்கில மொழி மூலம் க.பொ.த.உயர்தரம் கற்று முதன்முதலாக எமது வலயத்தினை சேர்ந்த இராமகிருஸ்ண மிசன் மாணவி வர்த்தகத்துறையில் ஒருவர் 2C,S பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours