தர்மா
அம்பாறை மாவட்டத்துக்கான அபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இம்மாவட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் வேலை திட்டங்கள் மூலமான நன்மைகளை பெற்று கொடுக்கின்ற பொன்னான வாய்ப்பு அவருக்கு கிடைத்து உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம தெரிவித்தார்.
இவரின் அம்பறை இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இது தொடர்பாக ஸ்ரீயானி விஜேவிக்கிரம மேலும் தெரிவித்தவை வருமாறு
இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த நோக்கத்துடன் நின்று ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸவை மாபெரும் வெற்றி அடைய செய்து உள்ளார்கள். தேசிய பாதுகாப்பை முதன்மை விடயமாக கொண்டு இவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கி உள்ளார்கள்.
விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் இவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கிய தமிழ், சிங்கள, முஸ்லிம் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். மக்களின் பிரச்சினைகளை எமது அரசாங்கம் இதய சுத்தியுடன் தீர்த்து தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
அமைச்சு பதவி மூலமாக மாத்திரம்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று இல்லை. எனக்கு கிடைத்து உள்ள அதிகாரம் மிக்க அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி மூலமாக எமது மக்களுக்கான சேவைகளை நான் நிச்சயம் மேற்கொண்டு தருவேன்
Post A Comment:
0 comments so far,add yours