கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் பல்கலைக்கழகசேவையில் அதியுன்னத சேவையாற்றியவர்களையும் பல்கலைக்கழகசேவையிருந்து ஒய்வு பெறும் பணியாளர்களையும் கௌரவித்து அதியுன்னத சேவைப்பாராட்டு விழா ஒன்றை நாளை (01.01.2020)பிற்பகல் 2.00 மணிக்கு நடாத்தவுள்ளது.
வந்தாறு மூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த அதியுன்னத சேவை பாராட்டு விழாவில் சுமார் 25 தொடக்கம் 40 வருட காலம் வரை சேவையாற்றிய 21 உத்தியோகத்தர்களுக்கு பல்கலைக்கழக சேவையிலிருந்து ஒய்வு பெற்று செல்லும் 16 உத்தியோகத்தர்களையும் பாராட்டி கௌர விக்கப்படவுள்ளதுடன் அதியுன்னத சேவைக்கான தங்கம் ,வெள்ளி,வெண்கல பதக்கங்கள் அனுவித்தும் நினைவுப்படிகம்; பண அன்பளிப்புக்கள் வழங்கியும் கௌரவிக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் அறிவிக்கின்றது.
இதில் சுமார் 25 வருடம் தொடக்கம் 40 வருடங்கள் சேவையாற்றிய கல்வி சார்ந்த கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அதியுன்னத சேவைக்கு கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உபவேந்தர் பேராசிரியர் எவ்.சி ராகல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.வி.விவேகானந்தராஜா சிறப்பு அதிதியாக கலந்து கொள்ள இருக்கிறார்;.பதிவாளர் ஏ.பகிரதன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
Post A Comment:
0 comments so far,add yours