மீண்டும் ஒரு புத்தாண்டில் கால்பதிக்கின்றோம் கடந்த ஆண்டு பல வேதனை சோதனை தடைகள் ஏமாற்றம் என பலவகை துன்பங்களை எதிர்நோக்கியநாம் பிறக்கப்போகும் இந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் தமிழ்தேசிய பலத்தை நிர்ணயிக்கும் ஆண்டாக அமையப்போகிறது இதற்காக தமிழ்மக்கள் ஒற்றுமையை காட்டும் ஆண்டாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
புதுவருட வாழ்த்துச்செய்தியில் மேலும் கருத்து தெரிவிக்கையில் பிறக்கும் ஆண்டு இருபது இருபது என மகிழ்ச்சியாகவும் புதுமையாகவும் அழைக்கும் ஒரு ஆண்டாக மலர்கிறது.
இந்த புத்தாண்டு மலர்ந்து ஒருவருடத்துக்குள் இரண்டு தேர்தல்கள் இலங்கையில் இடம்பெறவுள்ளன.
பாராளுமன்ற தேர்தலும் அதன்பின் மாகாணசபை தேர்தல்களும் பிறக்கும் ஆண்டில் இடம்பெறும் நிலை உள்ளது இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்மக்களாகிய நாம் எமது பலத்தையும் ஒற்றைமையையும் ஒருமித்து காட்டவேண்டிய ஆண்டாக இந்த ஆண்டை நாம் மாற்றவேண்டும்.
கடந்த ஆண்டுகளில் நாம் அடைந்த ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நமக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை கழைந்து இன ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் சிந்தித்து செயலாற்றும் தேவை எல்லோர்க்கும் உள்ளது இதனை மனதில் நிறுத்தி செயலாற்ற வேண்டும்.
தற்போது இலங்கையின் ஆட்சியாளர்களின் செயல்பாடு திமிரும் ஆணவும் கலந்து தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் வழங்காமல் தட்டிக்கழித்து காலத்தை இழுத்தடித்து இரண்டாயிரத்து இருபதாவது ஆண்டையும் கடக்கலாம் என்ற கருப்பொருளை கொண்டு செயல்படுவதை அவதானிக்கமுடிகிறது.
தமிழர்களை ஒரம்கட்டி பௌத்த மத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே பல்வேறு வுதமான நடவடிக்கைகளை கடந்த ஆண்டில் ஆரம்பித்துள்ளனர் அதில் ஒன்றுதான் தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கான தடை என்ற செய்தியை நாம் பார்க்க முடிகிறது இந்த புறக்கணிப்பு மேலும் பிறக்கப்போகும் புத்தாண்டிலும் தொடர வாய்ப்புள்ளது இதை இனுமதிக்கமுடியாது
இந்த ஏமாற்று அரசியலுக்கு துணைபோகாமல் எமது அரசியல் தீர்வை பெறும் நோக்கில் எம்மால் முடிந்த பணிகளை தொடர்சியாக மேற்கொள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த புத்தாண்டை பயன்படுத்துவோம் என மேலும் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours