(எம்.ஏ.றமீஸ்)
கலாசார அலுவல்கள் திணைக்களமும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச கலை இலக்கிய விழா நிகழ்வுகள் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிவிரின் கீழுள்ள ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் உள்ள கலைஞர்கள் தாம் ஆற்றி வரும் இலக்கியத் துறை சேவைக்காய் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் கலை இலக்கியத் துறைக்காய் சேவையாற்றி வரும் 10 துறைசார்ந்த கலைஞர்கள்  கலாசார திணைக்களத்தின் 'கலைஞர் சுவதம்' திட்டத்தின் கீழ் பாராட்டிக் கௌரவிக்கப்ட்டபனர்.

அத்தோடு, பிரதேசத்தில் உள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலைத் துறையினை வளர்த்தெடுக்கும் வகையில் பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்ட போட்டிப் பிரிவிலும் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹுசைன்தீன் உள்ளிட்ட கலைஞர்கள், துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours