சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் மேற்பார்வை செய்து அவற்றை கண்காணிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க இது தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச பாடசாலைகள் கல்வி அமைச்சின் பொறுப்பில் இயங்காமையினால் , இந்த பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கற்பித்தல் முறைகள் , மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்  மற்றும் அவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க முடியாத சூழ்நிலையும் அரசாங்கத்திற்கு  ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் தகமைகளில் சிக்கல்கள் காணப்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த பாடசாலைகளை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய விசேட வேலைத்திட்டமொன்றும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(தகவலுக்கு வீரகேசரிக்கு நன்றி)
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours

Back To Top