மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றன

இந்த நிலையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் கந்தையா கலைவாணி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் கந்தையா கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டு இந்த பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours