துறையூர் தாஸன்

இன்றைய பெரும்பான்மை ஆட்சிச் சூழலில் சிறுபான்மைச் சமூகத்தை வழிநடத்த தந்தை செல்வா போல் ஒரு தலைவர் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகிறார் என, தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

S.J.V. செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வா நினைவுதின போட்டி பரிசளிப்பு நிகழ்வு, சா.செ.ச.இளங்கோவன் தலைமையில் ஊரணி பரி - யோவான் பொது மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(21) இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

1977 ஆம் ஆண்டு செல்வநாயகம் இறந்ததற்கு பிறகு தமிழர் அரசியலில் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழர் அரசியலிலே பல கட்சிகள் உருவாகியும் வடக்கும் கிழக்கும் என்று பிரிந்து செல்கின்ற செயற்பாடும்
முஸ்லிம்கள் ஒதுக்கப்படுகின்ற செயற்பாடுகின்ற நிலையும் உருவாகியுள்ளது. 1983 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை பற்றிய வேட்பாளர்களை நியமிப்பதிலே தமிழரசுக் கட்சியோடு அஷ்ரப் முரண்படுகிறார். இவையெல்லாம் தந்தை செல்வா என்றொரு தலைவர் இல்லாமல் போனதன் பிற்பாடே இடம்பெறுகிறது. கிழக்கிலே பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆனால் இன்று நாளுக்கு நாள் தலைவர்கள் உருவாகின்ற வரைக்கும் கிழக்குத் தமிழர் அரசியல் மாறிக்கொண்டிருக்கின்றது.

தந்தை செல்வாவினுடைய தமிழ்த்தேசியக் கோட்பாடு சிதைந்து போனதற்கு நிறுவிய கோட்பாட்டிலே உள்ளடங்கியிருந்த விடயங்களை தமிழர் சமூகம் மறந்ததே அடிப்படைக் காரணமாகும். தனித்தமிழர், தமிழீழம் என்ற கோட்பாடு சிதைவதற்கு கட்சிக்குள்ளே இடம்பெற்ற உட்கட்சி மோதல்கள் அல்லது இயக்க மோதல்கள், முஸ்லிம் சமூக புறக்கணிப்பு போன்றவையே அடிப்படையாகவிருந்தது. இந்த இரண்டும் இடம்பெறாமல் இருந்திருந்தால் இன்று தமிழீழ மண்ணிலே சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். 

தந்தை செல்வா தமிழ்ச் சமூகங்களுக்கு மத்தியிலே விதைத்திருந்த தமிழ்த்தேசியக் கோட்பாட்டை புறக்கணித்ததன் விளைவே இன்று அந்தரங்க நிலையில் நிற்பதற்கு காரணமாகிறது. ஆகவே செல்வநாயகம் சிறுபான்மையினுடைய தலைவராக விளங்கிய தந்தை என்பதில் இரு கருத்திருக்க முடியாது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours