க. விஜயரெத்தினம்
பொதுமக்களின் நிதியில் கொண்டுவரப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சுயநல அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்காகவும்,கட்சி அரசியல் விருப்பு வெறுப்புக்காகவும் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமுல்படுத்த முடியாது.மாறாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தே இவ்வேலைத்திட்டம் செயற் படுத்தப்படும் என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஊடக சந்திப்பொன்றை இன்று செவ்வாய்க்கிழமை(24)நண்பகல் 12.00மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரசாந்தன்...
குறிபாக கம்பரலி திட்டத்தில் மக்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அரசியல் தலைமைகள் தாங்கள் உரிய வகையில் தங்களுக்கு வாக்களிப்போருக்கும், தங்களது உறவினர்களுக்கும் கொங்கிரீட் வீதிகளைஇட்டதும், நீர் வடிந்தோடக்கூடிய வசதிகள் இல்லாமல் இயற்கையாக நீர்வடிந்தோடும் இடங்களை வழிமறித்தும் கொங்கிரீட்வீதிகள் அமைத்தது காரணமாக இன்று மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு மற்றும் இது தொடர்பான சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்துள்ளோம்.இது தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை கேட்டுத்தான் இத்திட்டம் செயற்படுத்துவதற்கு தொடர்பான முறையான குழுக்களை அமைக்க பணித்திருக்கின்றோம்.
கம்பரலிய சுற்று நிரூபத்தில் அவ்வறு குறிப்பிடப்படவில்லை.தற்போதைய புதிய அரசாங்கத்தின் "நிறைவான கிராம வேலைத்திட்டம்" தொடர்பாக மக்களிடம் கருத்துக்கள் கேட்டுதான் திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என உள்ளது.
ஆனால் கடந்த அரசாங்கத்தின் ஆளும் கட்சி அரசாங்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும்,வரவு-செ லவு திட்டத்திற்கும் கையை உயர்த்தியவர்களுக்குதான் கடந்த அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கியிருந்தார்கள்.இதனால் மக்களுக்கான நிதி முறையாக பகிர்தளிக்கப்படாமல் அரசியரல்வாதிகளுக்காக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெருந் தொகையான நிதி ஒதுக்கப்பட்டது.சுமார் 1000 மில்லியனுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டும் ஒழுங்கான செயற்பாடுகள் கடந்த அரசினால் முன்னெடுக்கப்படவில்லை.
அதேபோன்று இம்முறை ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் நல்லதொரு ஆட்சி மலரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
பாராபட்சமின்றி ஒவ்வொரு கிராமத்திற்கும் 2மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு நிறைவான கிராமம் எனும் வேலைத்திட்டம் எல்லா மக்களும் சமத்துவதான அபிவிருத்தியுடன் முன்னெடுக்கப்படுகிறது .
கம்பரலிய என்ற சொல்லுக்கு தழிழ் அர்த்தம் என்னென்று குறிப்பிடமுடியாத தமிழ்தேசிய கூட்டமைப்புதான் கடந்த ஆளும் அரசிற்கு பக்கதுணையாகவிருந்நது.
தமிழீழம் ,தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என தமிழ்மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய அரசு கம்பரலிய என்ற சொல்லிற்கு அப்போதைய அர்த்தம், தமிழ்ச்சொல் வழங்காமல் அனைத்து பலகைகளிலும் கம்பரெலிய என்ற பெயரை இட்டிருந்தார்கள்.ஆனால் கோத்தபாய ராஜபக்ஷைவை தேர்தல் காலத்தில் மிக மோசமாக விமர்சித்தவர்கள் இன்று தங்களின் வீட்டுக்கு முன்னாள் வீதியையும்,தமது சகோதரர்களின் வீதியையும் போடுவதற்கு மிகத்தெளிவான எதிர்பார்ப்புடன் அபிவிருத்திகளை முன்னெடுப்பது பற்றி இருக்கின்றார்கள்.
தற்போதை அரசாங்கத்தின் திட்டத்தில் கிராமத்திற்கான நிறைவான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மக்கள்,பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் கருத்துக் கேட்டே வேலைத்திட்டம் செய்ற்படுத்த சுற்றுநிறுபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
ஆனால் கோட்டபாய ராஜபக்ஸ வெற்றிபெறக்கூடாது, அவர் வந்தால் நாட்டில் அபிவிருத்தி நடைபெறாது நாட்டில் பாரிய விளைவுகள் இடம்பெறும் என தமிழ்த்தேசியம் பேசுகின்ற அரசியல் தலைவர்களும், கோத்தபாஜவிற்கு எதிராக நின்றவர்களும் இப்போது முன்டியடித்துக்கொண்டு தாம் விரும்பியவர்களுக்கான, சகோதரர்களுக்கான வீதிகளைப்போடுவதில் முன்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்விடயமாக அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆணித்தரமாக வேண்டுகோளை விடுத்துள்ளோம்.அரசியல் வாதிகளின் பேச்சுக்களுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் மக்கள், பிரதேச இளைஞர்கள் கருத்து கேட்கப்பட்டே நிறைவான கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
பொதுமக்களின் நிதியில் கொண்டுவரப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சுயநல அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்காகவும்,கட்சி அரசியல் விருப்பு வெறுப்புக்காக இத்திட்டம் அமுல்படுத்த முடியாது. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தே இவ்வேலைத்திட்டம் செயற் படுத்தப்படவேண்டும்.
கடந்தகாலம் போன்று மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல்வாதிகளின் விருப்புவெறுப்புக்கா ஒதுக்கப்பட்டால் மக்களுக்கு பக்கவிளைவுகளும்,வெள்ளம் போன்ற பாரிய அனர்த்தங்களையும் ஏற்படுத்தி மாவட்ட வெள்ளக்காடாக தென்படும் என பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours