கே.கிலசன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வாலிபர் முன்னணியினரால் தெற்காசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற சௌந்தரராஜன் பாலுராஜ் கௌரவிக்கப்பட்டார்.
இம் முறை நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி கராத்தே தனிநபர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த திரு.சௌந்தரராஜன் பாலுராஜ் அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் திரு.அ.நிதான்சன் உட்பட உறுப்பினர்களான திரு.எம்.பிரணவன் திரு.கவி திரு.கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வாலிபர் முன்னணியினரால் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாதனை படைக்கும் இளைஞர் யுவதிகள் கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பாலுராஜ் தேசிய போட்டிகளிலும் பல சாதனைகள் புரிந்தவர் என்பதோடு தான் உயர்தரம் கற்ற கல்முனை பாத்திமா தேசிய பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது


Post A Comment:
0 comments so far,add yours