கே.கிலசன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 25ம் கிராமம் மற்றும் 16ம் கிராமத்துக்கான போக்குவரத்து வீதி முற்றாக சேதமடைந்த நிலையில் பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மண்டூரிலிருந்து 14ம் கிராமத்தினூடாக செல்லும் பிரதான வீதியின் தொடர்ச்சியாகவுள்ள 3 கி.மீ நீளமுள்ள பகுதியே இவ்வாறு சேதமடைந்த நிலையில் உள்ளது. 45 குடும்பங்கள் வரை இவ்விரு கிராமங்களிலும் வசிப்பதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் இவ்வீதியினூடாகவே மாலையர்கட்டு பாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளது.

சாதரணமாக மோட்டார் சைக்கிள் பயணிக்கக்கூடிய நிலையிலிருந்த இவ்வீதி தற்போதைய பெரும் மழையில் மேலும் சிதைந்து துவிச்சக்கரவண்டிகூட செல்ல முடியாதவாறு புதைவதாக மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். அடிப்படை தேவைகள்கூட முழுமையாக பூர்த்தி செய்யப்படாத யானைகளின் பாதிப்பு தொடர்ச்சியாக ஏற்படும் இக்கிராமங்களில் பெரும் அச்சத்தின் மத்தியில் தாம் வாழ்ந்து வருவதோடு அவசர நிலமைகளில் வைத்தியசாலைக்குகூட விரைவாக செல்லக்கூடிய நிலையில் இவ்வீதி இல்லை என்பதால் இதனை கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் தமது வீதியை திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours