ஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடிய சமூகத்தை வளப்படுத்தக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டும். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 15 ம் கிராமம் ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் 2020 ம் ஆண்டிற்கான புதிய திருக்கணித பஞ்சாங்க நாட்காட்டியை வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஸ்ரீ முருகன் தேவஸ்தான முன்றலில் நேற்று (13) வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் ஆலயத் தலைவர் கண்ணப்பன் விஜயகுமாரன் தலைமையில் ஆலய பிரதம குரு தி.தேவகுமார் சிவாச்சாரியார் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வெளியிட்டு வைக்கப்பட்ட முதல் நாட்காட்டியை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் ஆலய பிரதம குருவிடம் இருந்து பெற்று கொண்டார்.
அங்கு உரையாற்றிய தவிசாளர்
ஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடிய சமூகத்தை வளப்படுத்தக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் இவ்வாறான நிகழ்வுகள் மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்யும் இதன் ஒரு வளமிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் இப் பிரதேச கிராமங்களில் 15ம் கிராமம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாகவும் நகர்புறங்களே வியக்கும் வண்ணம் முன்னேற்றம் கண்டிருப்பது என்னையும் இக் மண்ணில் பிறந்தவன் என்பதில் பெருமைகொள்ளச்செய்கிறது என குறிப்பிட்டார்.





Post A Comment:
0 comments so far,add yours