பாறுக் ஷிஹான் ,க.விஜயரெத்தினம்

கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் மாத்திரமே   தமிழ் மக்களை   பாதுகாக்கப்படுவர் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்

 பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலப்பாடு தொடர்பாக  வெள்ளிக்கிழமை(13)ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது. இளைஞர்கள் நாட்டிற்கு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க அபாரமாக செயற்பட்டனர். அது போன்றுதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒற்றுமையுடன் செயற்பட்டது மன மகிழ்ச்சியடைய வைத்தது.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ என்னுடன்  பேசினார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கபடும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.அவர் கூறினால் நடக்கும் எந்த வித மாற்று கருத்திற்கும் இடமில்லை.

தமிழ்மக்கள் தமது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் . எதிர்வரும் தேர்தல்களில் எமது வாக்குகளை சரியாக பயன்படுத்துவோம்.நாம் அமைச்சுபதவிகளில் இருந்தால்தான்    அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.அதன் மூலமே பலத்தை நிரூபித்து காட்ட முடியும்.இனிமேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பின்னால் தமிழ்மக்கள் சென்றால் தமிழர்களின் அனைத்து இருப்புக்களும் பாதுகாக்கப்படமாட்டாது.தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு,பசப்பு அரசியல் செய்து தமிழர்களையும் எதிரியாக காட்டியிருக்கின்றது.மாவீரர்களையும்,தமிழ்மக்களையும் வைத்து அரசியல் செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பு இனியும் அவ்வாறு செய்யமுடியாது.

தமிழர் பிரதேசங்களில்  தமிழ்மக்கள் ஆளும்தரப்பில்  அமைச்சர்களை வாக்களித்து உருவாக்க வேண்டும்.அப்போதுதான் தமிழர்களின் அபிவிருத்தியும்  எமது கையில் அதிகாரமும் கிடைக்கும்.இந்த நோக்கத்திற்க்காகவே சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியை துறந்து மஹிந்தவிடம் கூறிவிட்டு வெளியேறினேன்.அப்போதுதான்  தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும் .தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு சென்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்கையை சஜீத் பிரமதாச தூக்கி எறிந்துவிட்டார். மூன்று தினங்கள் தூங்கி எழும்பிய பின்னர் பணப்பரிமாற்றத்தை பெற்று கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்கள் சஜீத் பிரமதாசவை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தனர். நல்ல வேளை சஜித் பிரேமதாச வெற்றிபெறவில்லை வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் நிலை அபாயகரமாக இருந்திருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால்    தமிழ் மக்களை அவர் பாதுகாத்து கொள்வார்.தமிழ் மக்களின் பாதுக்காப்பு வேலியாக நான் இருப்பேன் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது நான் உங்களுடன் இருந்து பாதுகாப்பேன் என குறிப்பிட்டார்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours