(புருஷோத்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இருந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.

பெரியல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

அண்மையில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 12வது கழக தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் இன்று இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கியின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 170க்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கியுள்ளனர்.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் த.விவேக்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர் டாக்டர் நடராஜா ரமேஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள்,கழகத்தின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரத்தம் வழங்கிய கொடையாளிகளுக்கு மரக்கன்று ஒன்றும் ரீசேட் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours