மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாலயர்கட்டு 16ம் கிராமம் மற்றும் 25 ம் கிராமம் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த தரம் 5இன் கீழ் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கான புத்தகபைகள் மதிக்குமார் சமூக நற்பணி மன்றத்தால் மாதிரிக் கிராமம் பாலர் பாடசாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதிக்குமார் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகர் திரு.மதிக்குமார் உறுப்பினர் மோ.முகுந்தன் மாலையர்கட்டு பாடசாலையின் அதிபர் திரு.தேவன் அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் க.விஜய் மாதிரிக்கிராம சமூக ஆர்வலர் கு.ரூபன் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிகஷ்ட பிரதேசமான இக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மதிக்குமார் நற்பணி மன்றம் இப்பெரும் உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தங்களது கஷ்டம் உணர்ந்து இப்பெரும் சேவையை வழங்கியமைக்காக மதிக்குமார் சமூக நற்பணி மன்றத்தின் ஸ்தாபகர் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிபர் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றியை தெரிவித்தனர்




Post A Comment:
0 comments so far,add yours