இயற்கை அன்னை எமக்குப் பல கொடைகளை வழங்கியள்ளாள்நீர் , நிலம் , காற்று அவற்றில் முக்கியமானவை . ஆனால் , அக் கொடைகள் சி சந்தர்ப்பங்களில் ஆழிபேரலையாக , பூகம்பமாக , சூறாவளியாகக் குமுறுவதுண்டு . அக் குமறல்களினால் எமது உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படுவதுண்டு .
அந்த வகையில் , 2004/12/26 அன்று எமது நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை 
அரக்கனின் கொடுஞ் செயலால் எமது மக்கள் பலரின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

பறிக்கப்பட்ட உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைவதற்காக மீண்டுமொருதடவை நாம் அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்வோம் .மறைந்த எம் உறவுகளின் உறவுகள் ஆத்ம பலத்தினைப் பெறுவதற்காகவும் பிராத்திப்போம்.

உயிர் பறிக்கப்பட்ட உறவுகளே , யிரோடு இருந்து நினைத்துருகும் உறவுகளே எல்லோருக்காகவும் இறைவனை 
வேண்டுகின்றேன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours