துறையூர் தாஸன்.


போரதீவுப்பற்று பிரதேச செயலக சபைக்குட்பட்ட றாணமடு - பூச்சிக்கூடு பிரதான பாதையின் அணைக்கட்டு வெள்ளநீர் பெருக்கெடுத்ததன் காரணமாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி தலைமையிலான நிர்வாக திட்டமிடல் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இது தொடர்பாக நீர்ப்பாசன உயரதிகாரிகளின் கவனத்திற்கும் தெரிவித்தார்.

தொடர் கனத்த அடைமழையினால்
நீர் தேக்கங்களில், ஆறுகளில் பெருமளவிலான நீர் பெருக்கெடுத்து நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையிலேயே மூங்கிலாறு பெருக்கெடுத்ததன் காரணமாக இவ் அணைக்கட்டு உடைப்பு எடுக்கும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொதுமக்கள் பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ் அணைக்கட்டு உடைப்பெடுக்குமாயின் பிரதான அம்பாறை போக்குவரத்து மார்க்கம் பாதிக்கப்படுவதுடன், வயல் நிலங்களும் மாலையர்கட்டு, பூச்சிக்கூடு உட்பட பல்வேறு  கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்திற்குள்ளாகுமென பொதுமக்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே பொதுமக்களின் ஜீவனோபாய வாழ்வாதார போக்குவரத்து மார்க்கம் கருதி குறித்த அணைக்கட்டு வீதியினை முறையாக புனரமைக்க வேண்டிய தேவையுள்ளதாக பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours