இலங்கையின் பல பகுதிகளில் நேற்று காலை சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான 2010ஆம் ஆண்டு தோன்றியுயள்ளது. இம்முறை இந்த சூரிய கிரகணம் மிகவும் தெளிவாக பல இடங்களில் அவதானிக்க  முடிந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 8.10 மணி முதல் காலை 11.24 மணி வரையில் சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. காலை 9.35 மணியில் இருந்து 9.38 வரையிலான 3 நிமிடங்கள் மிகவும் தெளிவான சூரிய கிரணம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தின் போது மட்டக்களப்பில்  பல இடங்களில் குறிப்பாக மரங்கள் உள்ள இடங்களில் நிலத்தில் சூரிய கிரணத்தின் விம்பங்கள் பல பிறை வடிவில் அலங்காரமாக காட்சியளித்தது. 
இதில் காடலடப்படும் படங்கள் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஊரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வீட்டு முற்றத்தில் காணப்பட்ட காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours