(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிரதான வீதியோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரங்கள், பதாதைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், பிரதான வீதியோரத்தில் உள்ள வடிகான்கான் துப்பரவு செய்யப்பட்டதுடன், குப்பை கூழன்கள் துப்பரவு செய்யப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் வசித்து வரும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அக்கரைப்பற்று பிரதேசம் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள் போன்றன சோதனையிடப்பட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவை அழித்தொழிக்கப்பட்டன.
இதேவேளை பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள், சட்டவிரோத நடைபாதை வியாபார செயற்பாடுகள் போன்றன அப்புறப்படுத்தப்பட்டன.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு துணை நின்ற வர்த்த நிலைய உரிமையாளர்கள் மற்றும் டெங்கு நோயினை உருவாக்கக் கூடிய வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருந்த குடியிருப்பு உரிமையாளர்கள் போன்றோருக்கு சுகாதாரத் துறையினரால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours