சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் பெரியகல்லாறு உதயபுரம் பிரதேசத்தினைச் ; சேர்ந்த 60 மாணவர்களுக்கு  கற்றல்  உபகரணமும் புத்தகப் பையும்  வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பினது கிழக்குமாகாணக் கிளையின் பிரதித் தலைவர் முன்னாள் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன் தலைமையில் 14 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்  கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் உப செயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர், உதயபுரம் வித்தியாலய அதிபர் மற்றும் பிரதேச மகளீர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours