வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கலடி   பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை  பிரதேசத்தில்  வசிக்கும் மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் நாட்டில் வாழும்  சுவிஸ் உதயத்தின் உறுப்பினர் சி.ரமேஸ் அவர்களது  நிதி உதவியின் மூலம்  நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு    27  ஆம் திகதி வெள்ளிக்கிழமை    சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்  தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நாட்டில் பெய்த மழையினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில்   வந்தாறுமூலைப்  பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு இவ் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ் நிவாரணப் பொதிகளை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின்   பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த அவ் அமைப்பின் உறுப்பினர்களான கு.வாலா, சி.ரமேஸ் அமைப்பின் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் வழங்கிவைத்தனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுவிஸ் உதயம் அமைப்பு அண்மைக்காலமாக இவ் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours