மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி ,பட்டிப்பளை, வவுனதீவு ஆகிய பிரதேசசெயலகப்பிரிவிலே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை இன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.
இதனை கட்டுப்படுத்துவதற்கான மட்டக்களப்பு மாவட்ட பதில் மாவட்ட பொலீஸ் அதிகாரி எஸ்.குமார ஸ்ரீ மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைப்பு அதிகாரி தென்னக்கோன் அகியோருக்;கு இச்சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களை சட்டத்தின் முன்னிருத்துமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
இவ ;மண் அகழ்வானது இரவு பகலாக மேற்கொண்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இடம் பெருகின்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காதப்பட்சத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கவேண்டி வரும் எனவும் மக்களின் போக்குவரத்திற்கான பாதைகள் இவ்நடவடிக்கையினால் சேதம் ஆக்கபட்டு வருவதும் அவதானிக்கப்பட்டது.குறிப்பாக பட்டிப்பளை பிரதேச காவல்த்துறையினர் இதில் பாரா முகமாக செயற்படுவதும் அங்கு அவதானிக்க முடிந்தது
Post A Comment:
0 comments so far,add yours