தில்லை நாயகம் (பிரான்ஸ்)


பிரான்சு லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 17 ஆவது ஆண்டு விழா நேற்று 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. 

பிரான்சின் தேசியப் பண், தமிழ்ச்சோலைப் பண் என்பன இசைக்கப்பட்டதுடன். வரவேற்பு நடனமும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் ஆரம்பமாகின. 

வரவேற்புரையினை திருமதி நே.சிவகுமாரி அவர்களும் தலைமையுரையினை திரு.அ.புவனேஸ்வரராஜா (தலைவர்) அவர்களும் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் ஆற்றியிருந்தனர். 

லாக்கூர்நொவ் நகரபிதா அவர்களும் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்கள் பொன்னாடைபோர்த்தி மதிப்பளிப்புச் செய்திருந்தார். 

தொடர்ந்து நகரபிதா மாணவர்களுக்கு மதிப்பளிப்பையும் மேற்கொண்டிருந்தார். அபிநயப்பாடல், நாடகங்கள், பரதநாட்டியம், நாட்டிய நாடகங்கள், வாய்ப்பாட்டு, மதிப்பளிப்புகள், பிரெஞ்சு நாடகம், வயலின், தண்ணுமை, சுரத்தட்டு, எழுச்சி நடனங்கள், வில்லுப்பாட்டு, விவாத அரங்கு என அனைத்து நிகழ்வுகளையும் மாணவர்கள் திறமையாக வெளிப்படுத்தியிருந்தனர். நன்றியுரையினை லாக்கூர்னோவ் தமிழ்சங்கத்தின் செயலாளர் திரு.செ.செல்வக்குமார் அவர்கள் ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours