(காரைதீவு நிருபர் சகா)

நிந்தவூர் பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் எனும்கிராமத்தின் மூத்தபிரஜையான ஓய்வுநிலை அதிபர் காளிக்குட்டி அயிலேசபிள்ளை தனது 94வது வயதில் நேற்று காலமானார்.

10பிள்ளைகளைப் பெற்றெடுத்து 94வருடங்கள் வாழ்ந்த அவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட பிரபல சமுகசேவையாளராகவும் பண்பாடுள்ளவராகவும் திகழ்ந்தார்.

அட்டப்பள்ளத்தின் பூர்வீகம் அறிந்த மூத்த பிரஜைகள்; வரிசையில் இறுதிப்பிரமுகராக வாழ்ந்துவந்த அவரின் மறைவு குடும்பத்திற்கு மாத்திரமல்ல இப்பிரதேசத்திற்கே பேரிழப்பாகும். 
அன்னாரின் இறுதிச்சடங்கில் கொட்டும் மழைக்குமத்தியிலும் சுமார் ஆயிரம் தமிழ் முஸ்லிம் மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours