(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் "வேட்டையன்" முழு நீள திரைப்படம் எதிர்வரும் வியாழக்கிழமை(19)காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
"சமூக வலைத்தளங்களை எவ்வாறு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ?" எனும் கருப்பொருளை மையமாக வைத்து கொண்டு மட்டக்களப்பு கலைஞர்கள்,நடிகர்கள்,இளைஞர்கள் நடித்து வழங்கும் வேட்டையன் திரைப்படமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை காட்சிகளை கோர்ப்புச் செய்துள்ளார்கள்.
இம்முழு நீள திரைப்படத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளம் நடிகர் ஆதி-டிரு,திவ்யா-நிலாவும்,நடிகர் களான ரசிக்கா,கோடிஸ்வரன்,இம்ரான் ஆகியோர்களும் நடிக்கவுள்ளார்கள்.மட்டு மண்ணின் இயக்குனர் எஸ்.என்.விஸ்னுஜனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை எஸ்.பரணிதரன் தயாரித்துள்ளார்.இத்திரைப்படத்தி ற்கான இசையை ஏ.என்.அன்றூஸ் வழங்கியுள்ளார்.இத்திரைப்படம் இரண்டு மணித்தியாலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.இத்திரைப் படத்தை தயாரித்தவர்களையும், நடித்தவர்களையும் மட்டக்களப்பு மாவட்ட காலாச்சார பேரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17)மாவட்ட செயலகத்தில் வைத்து பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்கள்







Post A Comment:
0 comments so far,add yours