சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புனாணை மையிலந்தனைக் கிராமத்தில் நாடாத்தப்படுகின்ற இலவச வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவர்களையும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களது எதிர்காலத் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இற்று சனிக்கிழமை நடைபெற்ற.
சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையில் சுமார் 9 வருடங்களாக மையிலந்தனைக் கிராமத்தில் இவ் இலவச வகுப்பு நடைபெற்று வருகின்றது.
அண்மையில் பெய்த மழையினால் அப்பகுதி மாணவர்களும் பொது மக்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களை நேரடியாகச் சந்தித்து நிலைமையினைக் கேட்டறிந்ததுடன்எதிர்காலத்தில் உதவித்திட்டம் வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது
இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயம் அமைப்பினுடைய பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் சுவிஸ் உதயம் அமைப்பினது பிரதிச் செயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களான கே.ஜெயந்தி,ரி.புவனேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்



Post A Comment:
0 comments so far,add yours