(க. விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தேசிய அனர்த்த பாதுகாப்பு தினம் மாவட்ட  அரசாங்க அதிபர் மா.உதயகுமார்  தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை(26)காலை 9.26 மணியளவில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்,திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்,உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி,அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.சியாத்,மாவட்ட செயலத்தின் உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.
கடந்த 2004.12.26ஆம் திகதி சுமத்திரா தீவுப்பகுதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் காவுகொள்ளப்பட்டு மாவட்டத்திலும்,நாட்டிலும் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் உயிரிழந்துள்ள உறவுகள் ஆத்மா சாந்தியடைய பிராத்தி்த்ததோடு சுனாமியிபோது உயிரிழந்துள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இதன்போது தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப்படும் இந்நாளிலே இயற்கை அனர்த்தம் பூமியிலே எவ்வாறு ஏற்படுகின்றது?,அனர்த்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்,சமூக நிறுவனங்களின் அனர்த்த பங்களிப்பு,மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்கள்,உட்பட அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பாக மாவட்டத்தில் இருக்கும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு பூரணமாக தெளிவூட்டப்பட்டுள்ளதுடன்,மாவட்டத்தில் இருக்கும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்,பொதுமக்கள் அனைவரும் இயற்கை சூழலை சூழல் முகாமைத்துவத்துடன் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என இதன்போது கேட்டுக்கொண்டார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours