தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை செயலகத்தில் அக்கட்சியின் உப தலைவர் நா.நகுலேஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மகாணாசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகச் செயலாளர் நா.தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பொதுச்சுடரினை பா.அரியநேத்திரன் ஏற்றிவைத்ததுடன் மலர்மாலையை மா.நடராசா அணிவித்தார். பின்னர் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கமும் இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours